Map Graph

நியமசபா மந்திரம்

கேரள சட்டமன்ற கட்டடம்

நியமசபா மந்திரம் என்பது திருவனந்தபுரத்தின் பாளையத்தில் அமைந்துள்ள ஒரு அரசு கடடம் ஆகும். இது கேரள சட்டமன்றம் அல்லது நியமசபா அமைந்துள்ள இடமாகும். இந்த வளாகமானது பல சமகால கட்டடக்கலை பாணிகளின் வலுவான தாக்கங்களுடன், பாரம்பரிய கேரளக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது பிரமாண்டமான படிக்கட்டுகள், பூங்காக்கள், நீர்நிலைகள் போன்றவற்றுடன் பெரிய சட்டமன்ற மண்டபத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நியமசபா அவைத்தலைவர், அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், மற்றும் சுயாதீன ஆணையங்கள் மற்றும் அமைப்புகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த சட்டமன்ற வளாகமானது 22 மே 1998 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர், கே. ஆர். நாராயணனால் திறந்து வைக்கப்பட்டது.

Read article
படிமம்:Kerala_Legislative_Assembly,_Thiruvananthapuram.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Niyamasabha_Mandiram.JPGபடிமம்:Kerala_Niyamasabha.jpg